இமயமலைப் பகுதியில் ஒரு அதிசய விடயமாக கருதப்படும் “எடி’ என அழைக்கப்படும் பனி மனிதனின் காலடி தடத்தை கண்டுபிடித்துள்ளனர். உண்மையில் பனி மனிதன் இருக்கிறானா என்ற ஆய்வுக்கு இந்த கண்டுபிடிப்பு உயிரூட்டியுள்ளது.இமயமலைப் பகுதியில், பாதி மனிதனாகவும், பாதி குரங்காகவும் விளங்கும் “எடி’ என்ற பிரமாண்டமான பனி மனிதன் உள்ளதாக பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் ” சைபி’ என்ற “டிவி’ சேனலின் ஊழியர்கள் 23 பேர், நேபாளத்தில் சொலுகூம்பு மாவட்டத்தில் ஒரு வாரம் தங்கி ஆய்வில் ஈடுபட்டனர்.