தினமும் குறிப்பிட்ட நேரம் வரை தான் தூங்க வேண்டும். இந்த தூக்க நேரம் குறைந்தாலும், அதிகமானாலும் ஆபத்து என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. லண்டன் மருத்துவ கல்லூரியை சேர்ந்த ஜானி பெரி என்பவர் மனிதனின் தூக்க நேரம் குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் 35 வயது முதல் 55 வயதுக்கு உட்பட்ட 10,308 பேர் உட்படுத்தப்பட்டனர். ஆறு மணி நேரம், ஏழு மணி நேரம், எட்டு மணி நேரம் என தினம் தினம், மாறுபட்ட அளவுகளை தூக்க நேரமாக கொண்டவருக்கு இருதய பாதிப்பினால் ஏற்படக்கூடிய மரணம் உண்டாக 110 சதவீத வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் ஏழு முதல் எட்டு மணி நேரத்துக்கு மேல் தூங்குபவர்களுக்கு இருதய நோய் அல்லது பிற நோய்களால் மரணம் உண்டாக 110 சதவீத வாய்ப்பு உள்ளது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. தினமும் இரவில் ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்குவது தான் சரியான ஓய்வையும், நல்ல உடல் நலத்தையும் தரும் என்று ஜானி பெரி தனது ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளார்.
- நன்றி விழிப்பு